உயிரிழந்த தாயை சக்கர நாற்காலியில் மயானத்துக்கு கொண்டு சென்ற மகன்! காணொளி தற்போது வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. திருச்சி: அருகே மணப்பாறை பாரதியார் நகரில் வசித்து வந்தவர் பெரியசாமி மனைவி ராஜேஸ்வரி. சுமார் நான்கு வருடங்களுக்கும் மேலாக தோல் நோயால் பாதிக்கப்பட்டு மகன் முருகானந்தத்தின் பராமரிப்பில் இருந்து வந்த இவர் நேற்று (செப் 8) அதிகாலை உடல் நலக் குறைவால் உயிரிழந்துள்ளார். அதனைத் தொடர்ந்து தோல் நோயால் பாதிக்கப்பட்ட தனது தாய்க்கு இறுதிச்சடங்கு செய்ய யாரும் முன் வரமாட்டார்கள் என எண்ணிய முருகானந்தம் தனது தாயின் உடலை சக்கர நாற்காலியில் வைத்து செவலூர் பகுதியில் இருக்கும் மயானம் வரை தனி ஒருவனாக தள்ளிச் சென்றுள்ளார். உயிரிழந்த தாயை நான்கு சக்கர நாற்காலியில் மயானத்துக்கு கொண்டு சென்ற மகன்...மணப்பாறையில் பரபரப்பு. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த காணொளி தற்போது வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மணப்பாறை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.