அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு!
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு! தமிழகத்தில் மாநகராட்சிகள்,நகராட்சிகள்,பேரூராட்சிகளில் சொத்து வரியை குறைந்தபட்சமாக 25 சதவீதம் முதல் அதிகபட்சமாக 150 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதையடுத்து அதிமுக சார்பில் நேற்று பல இடங்களில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து புதுக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் சி.விஜயபாஸ்கர்,உள்ளிட்ட அதிமுகவினர் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.