தவறான சிகிச்சை! பிரபல இளம் நடிகை திடீர் மரணம்!
தவறான சிகிச்சை! பிரபல இளம் நடிகை திடீர் மரணம்! கன்னட நடிகை சேத்தன் ராஜ் திடீரென மரணமடைந்துள்ளது பெரும் பரபரப்பையும், திலையுலகினரை அதிர்ச்சியடையவும் செய்துள்ளது. தவறான சிகிச்சைக் காரணமாக நடிகை சேத்தன் மரணமடைந்துள்ளதாக போலீசார் விசாரித்து வருகின்றனர். கீதா, தொராசனி போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்து லட்சக்கணக்கான ரசிகர்களைப் பெற்றிருந்தவர் நடிகை சேத்தன் ராஜ். கன்னட திரையுலகில், நடிகை சேத்தன் ராஜூக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், பெங்களூரில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நடிகை சேத்தன் ராஜ் திடீரென மரணமடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கன்னட திரையுலகில் நடிகை சேத்தனா ராஜ் என்றால் தெரியாதவர்கள் யாரும் இல்லை. இவருக்கு வயது 21. இவர் கீதா, தொராசனி போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் அனைவராலும் சிறந்த நடிகை என்ற அடையாளம் காணப்பட்டவர். இவர் பெங்களூரில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் தனது உடல் எடை மற்றும் கொழுப்பு குறைப்பு சிகிச்சைக்காக நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு காலை கொழுப்பு நீக்கு...