Posts

Showing posts with the label #msdhoni #raina

தல தோனிக்கும் – சின்னத்தல ரெய்னாவுக்கும் இடையே விரிசல், மனக்கசப்பு! ஆதாரத்தை காட்டும் ரசிகர்கள்

Image
தல தோனிக்கும் – சின்னத்தல ரெய்னாவுக்கும் இடையே விரிசல், மனக்கசப்பு! ஆதாரத்தை காட்டும் ரசிகர்கள் ஐபிஎல் 2022 தொடருக்காக அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்திருந்த நிலையில் முதல் போட்டி தொடங்குவதற்கு ஒருநாள் மட்டுமே எஞ்சி இருந்த நிலையில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம்எஸ் தோனி அந்தப் பதவியிலிருந்து விலகுவதாக திடீரென்று நேற்று அறிவித்தார். தற்போது 40 வயதைக் கடந்து விட்ட அவர் சென்னை அணியின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு அந்த அணியின் மற்றொரு நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவிடம் காலம் காலமாக வகித்து வந்த கேப்டன் பொறுப்பை ஒப்படைத்துள்ளார். இதை அடுத்து ஐபிஎல் 2022 தொடரில் ரவீந்திர ஜடேஜா தலைமையில் முதல் முறையாக ஒரு சாதாரண வீரராக எம்எஸ் தோனி விளையாட உள்ளது பலருக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் கடந்த 2008-ஆம் ஆண்டில் ஐபிஎல் தோற்றுவிக்கப்பட்ட போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற எம்எஸ் தோனி கடந்த வருடம் வரை தனது அபார கேப்டன்ஷிப் வாயிலாக ஒவ்வொரு வருடமும் அந்த அணியை குறைந்தது பிளே-ஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்று பெருமை