BiggBoss Ultimate : பிக்பாஸில் மீண்டும் ஒரு வைல்டு கார்டு என்ட்ரி - நேத்து தீனா... இன்னைக்கு யார் தெரியுமா?
BiggBoss Ultimate : பிக்பாஸில் மீண்டும் ஒரு வைல்டு கார்டு என்ட்ரி - நேத்து தீனா... இன்னைக்கு யார் தெரியுமா?
BiggBoss Ultimate : சுரேஷ் சக்ரவர்த்தி உடல் நலம் பாதிக்கப்பட்டதன் காரணமாகவும் திடீரென நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதால், பிக்பாஸ் அல்டிமேட்டில் அடுத்தடுத்து வைல்டு கார்டு போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டு வருகின்றனர்.
Tamil Nadu, First Published Mar 25, 2022, 1:11 PM IST
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே தனி மவுசு உண்டு. வழக்கமாக டிவி-யில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி, தற்போது முதன்முறையாக ஓடிடி-க்காக நடத்தப்படுகிறது. ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்துக்காக நடத்தப்படும் இந்நிகழ்ச்சிக்கும் பிக்பாஸ் அல்டிமேட் என பெயரிடப்பட்டு உள்ளது. இதில் முதலில் 14 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
அவர்களில் சுஜா வருணி, அபிநய், ஷாரிக், தாடி பாலாஜி, சினேகன், அனிதா ஆகியோர் எலிமினேட் ஆகி வெளியேறினர். வனிதா மன அழுத்தம் காரணமாகவும், சுரேஷ் சக்ரவர்த்தி உடல் நலம் பாதிக்கப்பட்டதன் காரணமாகவும் திடீரென நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினர். இதன்காரணமாக பிக்பாஸ் அல்டிமேட்டில் அடுத்தடுத்து வைல்டு கார்டு போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் காமெடி நடிகர் சதீஷ் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே சென்றார். இதையடுத்து நடிகை ரம்யா பாண்டியன் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டார். இதனிடையே சுரேஷ் சக்ரவர்த்தி கடந்த சில தினங்களுக்கு முன்னர் விலகியதன் காரணமாக அவருக்கு பதில் இருவரை களமிறக்கி உள்ளார் பிக்பாஸ்.
அந்த வகையில் நேற்று கைதி மற்றும் மாஸ்டர் படங்களில் நடித்த நடிகர் தீனா பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றார். இந்நிலையில், இன்று நடிகரும், நடன இயக்குனருமான சாண்டி தற்போது வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்டுள்ளார். இவர் ஏற்கனவே மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... RRR Review : ராஜமவுலியின் பாகுபலி மேஜிக் மீண்டும் ஒர்க் அவுட் ஆனதா? - ஆர்.ஆர்.ஆர் படத்தின் விமர்சனம்
Last Updated Mar 25, 2022, 1:11 PM IST
Comments
Post a Comment