விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கு ரூ.2 லட்சத்து 37 ஆயிரம் அபராதம்: வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி



திருவள்ளூர்: தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஆணையரின் ஆணையின் பெயரில் அனைத்து மாவட்டங்களிலும் ஏர் ஹாரன் பொருத்திய வாகனங்கள் மீது தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை வடக்கு சரக இணை ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில், திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் மோகன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கா.பன்னீர்செல்வம், மோகன் ஆகியோர் அனைத்து பகுதிகளிலும் வாகனத் தணிக்கை செய்தனர். இதில் சுமார் 75 வாகனங்கள் தணிக்கை செய்தது 16 வாகனங்களுக்கு ஏர் ஹாரன் பொருத்தப்பட்டது கண்டறிந்து அதற்கான கட்டணமாக ₹ 2 லட்சத்து 37 ஆயிரத்து 100   நிர்ணயம் செய்து வெளிமாநில வாகனம் ஒன்றுக்கு மட்டும் ₹ 10 ஆயிரம் உடனடி வசூல் செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog