சென்னை பாஷையில் உலகநாயகன் எழுதி, பாடி, ஆடி, கலக்கிய பாடல்களும் படங்களும் – ஒரு பார்வை


சென்னை பாஷையில் உலகநாயகன் எழுதி, பாடி, ஆடி, கலக்கிய பாடல்களும் படங்களும் – ஒரு பார்வை


உலகநாயகன் கமல் சென்னை பாஷை பேசி நடித்த படங்கள் எல்லாமே டாப்பு தான். பாடல்களும் செமயாக இருக்கும். அந்த வகையில் எல்லாம் இன்பமயம் முதல் தற்போதைய விக்ரம் வரை உள்ள படங்களின் வரிசைப்பட்டியலைப் பார்க்கலாம்.

எல்லாம் இன்பமயம்

1981ல் ஜி.என்.ரங்கராஜன் இயக்கிய படம் எல்லாம் இன்பமயம். இளையராஜாவின் இன்னிசையில் கமல், மாதவியின் நடிப்பில் வெளியான படம் எல்லாம் இன்பமயம். இந்தப்படத்தில் கமல் சென்னை பாஷையில் பட்டையைக் கிளப்பியிருப்பார். மாமன் வீடு மச்சு வீடு என்ற பாடல் செம ஹிட் ஆனது.

அபூர்வ சகோதரர்கள்

1989ல் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளியான அபூர்வ சகோதரர்கள் படத்தில் சென்னைத் தமிழில் மனோரமாவும், உலக நாயகன் கமல்ஹாசனும் இணைந்து ராஜா கைய வச்சா பாடலைப் பாடி அசத்தியிருப்பார்கள்.

இளையராஜாவின் இசையில் கவிஞர் வாலியின் வைர வரிகளில் இந்த பாடல் அசத்தலாக இருந்தது. அதே போல அண்ணாத்தே பாடலின் ஆரம்ப வரிகள் சென்னை பாஷையில் தான் அமைந்தன.

காதலா காதலா

kasu mela song kamal, prabu deva

1998ல் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளியான காதலா காதலா படத்தில் உலக நாயகன் பாடிய காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது பாடல் சென்னை பாஷை தான். கவிஞர் வாலியின் பாடல் தான் இது. கார்த்திக் ராஜா இசையில் உலகநாயகன், உதித் நாராயணன் இணைந்து பாடினர்.

மௌலி இயக்கத்தில் 2002ல் வெளியான பம்மல் கே.சம்பந்தம் படத்தில் கமல் எழுதிய பாடிய கந்தசாமி முனியசாமி குப்புசாமி பாடல் சென்னைத் தமிழில் அமைந்தது. இந்தப்படம் முழுவதுமே கமல் சென்னை பாஷை பேசி கலக்கியிருப்பார்.

வசூல் ராஜா எம்பிபிஎஸ்

alwarpettai kamal

வசூல் ராஜா எம்பிபிஎஸ் படம் தான் கமல் சென்னை பாஷையில் பேசி நடித்த கடைசி படம். சரண் இயக்கத்தில் வைர முத்துவின் வரிகளில் அனைத்துப் பாடல்களுமே சூப்பர்ஹிட்.

குறிப்பாக சென்னை பாஷையில் வெளிவந்த ஆழ்வார் பேட்டை ஆண்டவா, வேட்டிய போட்டு தாண்டவா ஒரே காதல் ஊரில் இல்லையடா என்ற பாடல் செம ஹிட். பாடல் முழுவதும் சென்னை பாஷை இடம்பெறும். இந்தப்படம் வெளியானது 2004ம் ஆண்டு. அதன்பிறகு கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்குப் பின் தற்போது சென்னை பாஷையில் கமல் கலக்கிய பாடல் தான் விக்ரம்.

விக்ரம்

பத்தல பத்தல என்று தொடங்கும் இந்தப்பாடலை எழுதி பாடி உள்ளார் உலகநாயகன் கமல். பர்ஸ்ட் சிங்கிளாக வந்த நாள் முதல் இந்தப்பாடல் இணையதளத்தை திக்குமுக்காட வைத்துள்ளது.

இந்தப்படத்தை இயக்கி வருபவர் லோகேஷ் கனகராஜ். அனிருத்தின் இசையில் வெளியான இந்தப்பாடலில் கமல் போடும் குத்தாட்டம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

விக்ரம் படத்தில் பத்தல பத்தல பாடல் இணைந்துள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் ஜூன் 3ல் வெளியாகிறது. இந்தப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் 15ம் தேதி (நாளை மறுநாள்) சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்;டமாக நடைபெறுகிறது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

Comments

Popular posts from this blog