வாடிக்கையாளர்கள் டெபிட் கார்டுகளை பயன்படுத்த முடியாது.. பிரபல வங்கி அறிவிப்பு!


வாடிக்கையாளர்கள் டெபிட் கார்டுகளை பயன்படுத்த முடியாது.. பிரபல வங்கி அறிவிப்பு!


முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான கோட்டக் மகிந்திரா வங்கி சமீபத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டது. அதாவது குறிப்பிட்ட நேரத்தில் வங்கியின் டெபிட் கார்டுகள் மற்றும் spendz கார்டு சேவைகளை பயன்படுத்த முடியாது என்ற தகவலை தனது வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் வங்கி தெரிவித்தது

டெபிட் கார்டை பயன்படுத்த முடியாது என்று வெளியான தகவல் கோட்டக் மகிந்திரா வாடிக்கையாளரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இது குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தான் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது. அதற்கான காரணத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

இதையு படிங்க.. மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் ஐடியா இருக்கா? இதை கொஞ்சம் படிங்க!

மெயிண்டனன்ஸ் காரணமாக வங்கிகள் அவ்வப்போது, பல்வேறு பரிவர்த்தனைகளை குறிப்பிட்ட நேரம் வரை நிறுத்தி வைக்கும். அதேபோலத்தான் கோட்டக் மகிந்திரா நிறுவனம் திட்டமிடப்பட்ட மெயிண்டனன்ஸ் காரணமாக டெபிட் கார்டுகளை மற்றும் கார்டுகள் சார்ந்த சேவைகளை பயன்படுத்த தடை விதித்தது.  ஒரு சில குறிப்பிட்ட நேரத்தில் டெபிட் கார்டுகள் பயன்பாட்டில் இருக்காது, ATMகளில் பணம் எடுக்க முடியாது. அதுமட்டுமின்றி கார்டு இல்லாமல் பணம் எடுக்கவும் முடியாது என்று வங்கி அறிவித்தது.

கோட்டக் மகிந்திரா வங்கி தனது வாடிக்கையாளருக்கு அனுப்பிய மின்னஞ்சலில் பின்வரும் தகவல் குறிப்பிடப்பட்டிருந்தது. ‘அன்புள்ள வாடிக்கையாளருக்கு டெபிட் கார்டு மற்றும் spendz கார்டு சேவைகள் ஆகிய இரண்டுமே சில மணி நேரத்துக்கு பயன்படுத்த முடியாது. இந்த சேவை நள்ளிரவு 12:00 மணியில் இருந்து விடியற்காலை 2:30 மணி வரை மற்றும் 3:30 மணியிலிருந்து 6 மணி வரை இருக்காது என்று தெரிவித்து இருந்தது.

ATM, PIN உருவாக்கம், PIN அங்கீகாரம், கார்டு இல்லாமல் பணம் எடுப்பது, QR மூலம் பரிவர்த்தனை, கார்டு ப்ளாக் அல்லது அன்பப்ளாக் செய்வது, கார்டு பரிவர்த்தனை லிமிட்களை மாற்றுவது ஆகியவை அடங்கும்.

இதையும் படிங்க.. மாதம் 1 லட்சம் பென்சன் வேண்டுமா? உங்களுடைய 25 வயதில் இதை செய்யுங்கள்!

கார்டு பயன்படுத்த தடை என்பதை கடந்து வங்கி குறிப்பிட்டிருந்த நேரத்தில், பணப் எந்தவிதமான பரிவர்த்தனையும் மேற்கொள்ள முடியவில்லை. இந்தத்தடை ஒரு நாளுக்கு மட்டும் தானா அல்லது மெயிண்டனன்ஸ் காரணமாக இது மேலும் நீட்டிக்கப்படுமா என்பது பற்றிய வேறு எந்த விவரத்தையும் கோட்டக் மஹிந்திரா வங்கி இதுவரை வெளியிடவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Comments

Popular posts from this blog