சிறுமிக்கு திருமணம் - போலீசில் சிக்கிய சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு1998917545


சிறுமிக்கு திருமணம் - போலீசில் சிக்கிய சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு


சிதம்பரத்தில் குழந்தை திருமணம் செய்த பெற்றோர்கள் மற்றும் மண்டப உரிமையாளர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலுார் மாவட்டம் சிதம்பரம் கீழவீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த 5ம் தேதி, நடராஜர் கோவில் இரு தீட்சிதர்களின் மகள் மற்றும் மகனுக்கு திருமணம் நடந்துள்ளது. மணமக்கள் இருவருக்கும் 18 வயது பூர்த்தி அடைய இன்னும் சில மாதங்கள் உள்ளது நிலையில் திருமணம் நடந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து சமூக நலத்துறை அலுவலர் சித்ரா புகார் காவல் துறையில் புகார் அளித்தார். இது குறித்த விசாரணையில் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்ராக இருப்பவர் சிவராமன். இவரது மகன் கபிலன். இவருக்கும் நடராஜர் கோவில் தீட்சிதர் குடும்பத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த 3-ஆம் தேதி கீழவீதி எம்.எஸ் திருமண மண்டபத்தில் குழந்தை திருமணம் நடைபெற்றுள்ளது உறுதியாகி உள்ளது.

இதனை அடுத்து நடராஜர் கோவில் தீட்சிதர்கள் சிவராமன், சோ.பானுசேகர், கபிலன், எம்.எஸ் திருமண மண்டபம் உரிமையாளர் ஆகியோர் மீது சிதம்பரம் நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுபோன்ற குழந்தைகள் திருமணத்தை காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments

Popular posts from this blog