குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பிறந்தநாள்! முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!854519168


குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பிறந்தநாள்! முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!


குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பிறந்தநாளையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு சால்வை அணிவித்து, புத்தகம் பரிசு வழங்கி முதல்வர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா ஆகியோர் உடனிருந்தனர்.

முன்னதாக முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில், குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவுக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்.அதில், "குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். மேலும் பல ஆண்டுகள் நம் நாட்டுக்காகத் தாங்கள் தொண்டாற்ற வேண்டும் என்று விழைகிறேன். நேர்மையும், ஆழ்ந்த அறிவும், எத்தகைய சூழலிலும் சிறிது நகைச்சுவை நயமும் நிறைந்த தங்களது புகழ்மிக்க வாழ்க்கையானது பொதுவாழ்வில் இருக்கும் எங்கள் அனைவருக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது" என்று அவர் பதிவிட்டிருந்தார்.

Comments

Popular posts from this blog

Lemon Berry Spelt Flour Muffins #Berry

Pizza Salad #Pizza