TNPSC குரூப் 4 தேர்வு; ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி?1817808178


TNPSC குரூப் 4 தேர்வு; ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி?


டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுகள் வருகின்ற ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இதற்கான ஹால்டிக்கெட் Hall Ticket வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை டவுன்லோடு செய்யலாம்

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான ஊழியர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசு தேர்வு செய்து வருகிறது. இந்த தேர்வுகள் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 ஆகிய தேர்வுகள் நடத்தப்படுகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்(வி.ஏ.ஓ.), தட்டச்சர், இளநிலை உதவியாளர், நில அளவையாளர் உள்ளிட்ட 7 ஆயிரத்து 382 அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. 

ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்வது எப்படி?

முதலில் https://www.tnpsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்குச் செல்லுங்கள் அல்லது https://apply.tnpscexams.in/public/otr?app_id=UElZMDAwMDAwMQ==

அடுத்து வரும் பக்கத்தில் நிரந்தர பதிவு விவரங்கள் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அடுத்து அதில் உங்கள் பயனர் ஐ.டி (User ID) மற்றும் கடவுசொல் (Password) உள்ளிட்டு, திரையில் கேட்கப்படும்,அப்திவு செய்து லாகின் செய்யுங்கள் 

அடுத்து ஹால் டிக்கெட் டவுன்லோட் என்பதை கிளிக் செய்யுங்கள்

பின்னர் உங்கள் விண்ணப்ப எண் கொண்டு உள்நுழைய வேண்டும். இப்போது உங்கள் ஹால்டிக்கெட் திரையில் காண்பிக்கப்படும். அதனை டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளுங்கள்.

Comments

Popular posts from this blog