தாயை கொலை செய்து செல்போனில் பாட்டுக்கேட்ட 9 ஆம் வகுப்பு மாணவன்.. ப்ரீ பயர் - கஞ்சா அடிமையால் விபரீதம்..!320230202


தாயை கொலை செய்து செல்போனில் பாட்டுக்கேட்ட 9 ஆம் வகுப்பு மாணவன்.. ப்ரீ பயர் - கஞ்சா அடிமையால் விபரீதம்..!


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சுங்கக்காரன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்செல்வன். சிவில் காண்ட்ராக்டரான இவருக்கு யுவராணி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். யுவராணி புஞ்சை புளியம்பட்டியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வணிக உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.

இவரது மகன் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் சரிவர படிக்காமல் நண்பர்களுடன் ப்ரீ பயர் விளையாடி வந்ததாக கூறப்படுகின்றது. இதனால் மகனிடம் இருந்த செல்போனை வாங்கி வைத்துக் கொண்ட அவரது தாய் யுவராணி தனது மகன் நன்றாக படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 3 மாதங்களுக்கு முன்பு பள்ளியில் உள்ள ஹாஸ்டலில் சேர்த்துள்ளார்.

கால் ஆண்டு தேர்வு விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த அவன் மீண்டும் கூட்டாளிகளுடன் சேர்ந்து கஞ்சா புகைக்க தொடங்கியதால் சிறுவனை தாய் கண்டித்துள்ளார். இதனால் சைக்கோ போல கத்திய அந்த சிறுவன் தாயுடன் கடுமையாக சண்டையிட்டுள்ளான். சம்பவத்தன்று இரவு வீட்டில் யுவராணி, தனது மகன் மற்றும் மகளுடன் வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 1 மணி அளவில் தூங்காமல் விழித்திருந்த அந்த சிறுவன் வீடு கட்ட பயன்படுத்தப்படும் ஹாலோ பிளாக் கல்லை எடுத்து உறங்கிக் கொண்டிருந்த தனது தாய் யுவராணியின் தலை மீது தூக்கிப்போட்டதில் தலையில் பலத்த ரத்த காயம் சம்பவ இடத்திலேயே யுவராணி பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது மகள் எழுந்து சத்தம் போட்டதால் கொடூரச் சிறுவன் யுவராணியின் செல்போனை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு ஓடி தலைமறைவானான். இது குறித்து அவர்களது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கொடுத்த தகவல் வேறு சம்பவ இடத்திற்கு வந்த புஞ்சை புளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர்.

இதற்க்கிடையே வீட்டில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் செல்போனில் பாடல் கேட்டுக் கொண்டே சாலையில், புகைப்பிடித்த படியே நடந்து சென்ற அந்த கொலைக்கார சிறுவனை சத்தியமங்கலம் டிஎஸ்பி சந்திரசேகரன் மடக்கிப்பிடித்தார். அவனை தனது வாகனத்தில் ஏற்றி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்த போலீசார் 14 வயதேயான அந்த சிறுவனின் நடவடிக்கைகளை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பெற்ற தாயை கொலை செய்து விட்டோமே ? என்ற எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல், ப்ரீ பயர் விளையாட்டில் எதிரியை கொலை செய்த மனோபாவத்தில் சிரித்துக் கொண்டே போலீசாரிடம் பேசி உள்ளான். அவன் கஞ்சா போதையில் இருப்பதை அறிந்து போலீசார் அவனிடம் போதை தெளிந்த பின்னர் விரிவாக விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

பெற்று... வளர்த்து... நோய்க்கும் பேய்க்கும், பார்த்து.. பார்த்து.. தன் மகனின் எதிர்காலத்திற்காக அறிவுரை கூறிய தாயை , கஞ்சா மற்றும் ப்ரீபயர் போதையில் 14 வயது சிறுவன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Comments

Popular posts from this blog