Posts

டெல்லி முண்ட்கா தீ விபத்து: குறைந்தது 27 பேர் பலி - பிரதமர், டெல்லி முதல்வர் இரங்கல்

Image
2 மணி நேரங்களுக்கு முன்னர்

விரைவு ரயில் சேவையில் மாற்றம்

Image
விரிவாக படிக்க >>

சென்னை குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் பற்றி எரிந்த கார்: உடனடியாக நிறுத்தப்பட்டதால் உயிர்சேதம் தவிர்ப்பு

Image
சென்னை: சென்னை குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் ஓடிக்கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை பல்லாவரத்தில் இருந்து 4 பேர் கொண்ட நபர்கள் திருமண நிகழ்ச்சியை முடித்து விட்டு, தாம்பரத்தை நோக்கி டாடா இண்டிகா காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலை வழியே வந்து கொண்டிருந்த பொழுது, காரின் பின்புறம் புகை கிளம்பியுள்ளது. இதனை கண்ட ஓட்டுநர் காரை சாலையின் இடதுபுற ஓரமாக நிறுத்தி உள்ளார். பின்னர், காரில் இருந்த 4 பேரும் உடனடியாக காரை விட்டு வெளியேறி உள்ளனர். காரின் பின்புறம் ஏற்பட்ட தீ, சிறிது நேரத்தில் மளமளவென பரவி கார் முழுவதும் பற்றி எரிந்தது. இதனையடுத்து தாம்பரம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை... விரிவாக படிக்க >>

சென்னை பாஷையில் உலகநாயகன் எழுதி, பாடி, ஆடி, கலக்கிய பாடல்களும் படங்களும் – ஒரு பார்வை

Image
சென்னை பாஷையில் உலகநாயகன் எழுதி, பாடி, ஆடி, கலக்கிய பாடல்களும் படங்களும் – ஒரு பார்வை உலகநாயகன் கமல் சென்னை பாஷை பேசி நடித்த படங்கள் எல்லாமே டாப்பு தான். பாடல்களும் செமயாக இருக்கும். அந்த வகையில் எல்லாம் இன்பமயம் முதல் தற்போதைய விக்ரம் வரை உள்ள படங்களின் வரிசைப்பட்டியலைப் பார்க்கலாம். எல்லாம் இன்பமயம் 1981ல் ஜி.என்.ரங்கராஜன் இயக்கிய படம் எல்லாம் இன்பமயம். இளையராஜாவின் இன்னிசையில் கமல், மாதவியின் நடிப்பில் வெளியான படம் எல்லாம் இன்பமயம். இந்தப்படத்தில் கமல் சென்னை பாஷையில் பட்டையைக் கிளப்பியிருப்பார். மாமன் வீடு மச்சு வீடு என்ற பாடல் செம ஹிட் ஆனது. அபூர்வ சகோதரர்கள் 1989ல் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளியான அபூர்வ சகோதரர்கள் படத்தில் சென்னைத் தமிழில் மனோரமாவும், உலக நாயகன் கமல்ஹாசனும் இணைந்து ராஜா கைய வச்சா பாடலைப் பாடி அசத்தியிருப்பார்கள். இளையராஜாவின் இசையில் கவிஞர் வாலியின் வைர வரிகளில் இந்த பாடல் அசத்தலாக இருந்தது. அதே போல அண்ணாத்தே பாடலின் ஆரம்ப வரிகள் சென்னை பாஷையில் தான் அமைந்தன. காதலா காதலா kasu mela song kamal, prabu deva 1998ல் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளியான க

பீப் பிரியாணிக்கு தடை ஏன்? பட்டியலின ஆணையத்திடம் சிக்கிய மாவட்ட ஆட்சியர்!

Image
பீப் பிரியாணிக்கு தடை ஏன்? பட்டியலின ஆணையத்திடம் சிக்கிய மாவட்ட ஆட்சியர்! அளவான தீயில் மிதமான சூட்டில் பொருமையாக வெந்து, தட்டில் மேல் தம்போட்டு திறக்கும்போது வரும் அந்த வாசனைக்கு ஆம்பூர் பிரியாணி என்று பெயர். உலக அளவில் பிரபலமான இந்த ஆம்பூர் பியாணிக்கு மேலும் சிறப்பு சேர்ப்பது சீரக சம்பா அரசிதான். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் சிறியதும் பெரியதுமாக நூற்றுக்கும் மேற்பட்ட பிரியாணி கடைகள் உள்ளன.  இங்கு சிக்கன், மட்டன், பீப் உள்ளிட்ட இறைச்சிகளை கொண்டு பிரத்தியேகமான சுவையில் பிரியாணி தயாரிக்கப்படும். இந்த பிரியாணிக்காகவே ஆம்பூர் வரை சென்று சாப்பிடும் உணவு பிரியர்களும் உள்ளனர். இந்த நிலையில் இந்த ஆர்பூர் பிரியாணி க்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த ஆண்டு முதல் முறையாக பிரியாணி திருவிழா நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கான ஆலோசனை கூட்டம் அரசு அதிகாரிகள் மற்றும் பிரியாணிக்கடை உரிமையாளர்கள் தரப்பில் நடத்தப்பட்டது. அப்போது பீப் பிரியாணிக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.  மேலும் படிக்க | ரயில் நிலையத்தில் தெரு நாய்க்கு சோறூட்டிய பெண்ணின் வீடியோ வைரல்!

டைட்டன்ஸ்களின் மோதல் அடிமட்ட மோதல் ஆன கதை- சிஎஸ்கே-மும்பை தரமற்ற போட்டி

Image
டைட்டன்ஸ்களின் மோதல் அடிமட்ட மோதல் ஆன கதை- சிஎஸ்கே-மும்பை தரமற்ற போட்டி கிளாஷ் ஆஃப் த டைட்டன்ஸ் என்று மும்பை இந்தியன்ஸ்-சிஎஸ்கே போட்டிகளை விளம்பரப்படுத்துவார்கள், ஏதோ இங்கிலிஷ் பிரீமியர் லீகின் மான்செஸ்டர் யுனைடெட்- ஆர்சனல் மோதல் போல், ஸ்பானிய லீகின் ரியால் மேட்ரிட்-பார்சிலோனா மோதல் போல் ஹைப் கொடுத்தார்கள், ஆனால் ஐபிஎல் கிரிக்கெட்டின் இந்தத் தொடரின் குறைந்தபட்சம் 2வது மோசமான போட்டியாக அமைந்தது. தர அளவில் மோசமான முதல் போட்டி ஆர்சிபி 68 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன போட்டி, 2வது இடம் நேற்றைய மும்பை -சிஎஸ்கே போட்டிக்கே. ஆட்டம் தொடங்கும்போதே மின்சார பிரச்சனையினால் ரிவியூ சிஸ்டம் வேலை செய்யாது என்றார்கள். பிட்ச் பேட்டிங், பந்து வீச்சு இரண்டுக்கும் ஓரளவுக்கு வாய்ப்புள்ளதாக இருந்தால் போட்டி நன்றாக இருக்கும், தோனி சொல்வது போல் 130 ரன்களுக்குக் கீழ் ஒரு போட்டியாகவே இல்லாமல் ஆகி விடும். ரிவியூ சிஸ்டன் இல்லாததால் சிஎஸ்கேவின் ஸ்டார் பேட்டர் டெவன் கான்வே, சாம்ஸ் பந்தில் கால்காப்பில் வாங்க நடுவரோ, ‘எல்லாத்துக்கும் ரிவியூ கேப்பீங்க இல்ல’ இப்ப என்ன செய்வீங்கன்னு கடும் முகத்துடன் கையை உயர்த்தி விட்டார். அங்க

IPL 2022 CSK vs MI- பிட்ச் எப்படி இருந்தாலும் 130 ரன்களுக்குக் கீழ் எடுத்தால் வெற்றி வாய்ப்பு இல்லை- தோனி பேட்டி

Image
IPL 2022 CSK vs MI- பிட்ச் எப்படி இருந்தாலும் 130 ரன்களுக்குக் கீழ் எடுத்தால் வெற்றி வாய்ப்பு இல்லை- தோனி பேட்டி வான்கடேயில் நேற்று வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வேட்டையாக அமைந்ததில் சிஎஸ்கே அணி 97 ரன்களுக்குச் சுருள மும்பை இந்தியன்ஸ் அணி இந்த இலக்கை 15வது ஓவரில் 103/5 என்று போராடி வெற்றி பெற்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ்னா தோனி, தோனீன்னா சிஎஸ்கே என்பதற்கு இணங்க அவர் மட்டுமே கேப்டனாக 33 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 36 ரன்கள் எடுத்தார். இரு அணிகளுக்குமே அவர் தான் ஹை ஸ்கோர். மும்பை இந்தியன்ஸ் அணியில் சாம்ஸ் அபாரமாகத் தொடங்கி 3 விக்கெட்டுகளைக் கழற்ற ரைலி மெரிடித், ஸ்பின்னர் குமார் கார்த்திகேயா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பும்ராவை ஆட முடியவில்லை 12 ரன் 1 விக்கெட். தொடர்ந்து ஆடிய மும்பை இந்தியன்ஸும் திணறியது முகேஷ் சவுத்ரி 3 விக்கெட்டுகளை எடுத்தார். ரோஹித் சர்மா 4 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுத்ததால் பவர் ப்ளேயில் 4 விக்கெட்டுகளை இழந்தாலும் 33 ரன்களை எடுத்தது மும்பை பிறகு ஹிருதிக் ஷோகீன், 18, திலக் வர்மா, 34 இருவரும் சேர்ந்து ஸ்கோரை 81 ரன்களுக்கு உயர்த்த மலை மனிதன் டிம் டேவிட் இறங