Posts

சென்னையில் வாகன சோதனையின்போது பக்கவாட்டு கண்ணாடி இல்லாத 679 வாகனங்கள் மீது போலீசார் வழக்கு

Image
சென்னை: சென்னையில் போலீசார் நடத்திய வாகன சோதனையின்போது பக்கவாட்டு கண்ணாடி இல்லாத 679 வாகனங்கள் மீது வழக்கு பதியப்பட்டது. சூரிய ஒளி புகாத கருப்பு பிலிமை வாகன ஜன்னல்களில் அகற்றாத 292 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். விதிகளை மீறி வாகனங்களை இயக்கிய வாகன உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.  Tags: சென்னை வாகன சோதனை பக்கவாட்டு கண்ணாடி விரிவாக படிக்க >>

தென்காசியில் பரபரப்பு - அதிமுக பிரமுகரின் தந்தை கொடூர கொலை

Image
தென்காசியில் பரபரப்பு - அதிமுக பிரமுகரின் தந்தை கொடூர கொலை

அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குநர்களில் ராஜமவுலியை அடுத்து KGF இயக்குநர்.. எவ்வளவு தெரியுமா?

Image
அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குநர்களில் ராஜமவுலியை அடுத்து KGF இயக்குநர்.. எவ்வளவு தெரியுமா? கேஜிஎஃப் 2 திரைப்படம் ₹ 1,000 கோடி வசூலை தாண்டி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், கேஜிஎஃப் படத்தின் வெற்றியை அடுத்து இயக்குநர் பிரசாந்த் நீல் தனது சம்பளத்தை ₹50 கோடியாக உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உறுதியானால் இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குநர்களில் ராஜமவுலியை அடுத்து பிரசாந்த் நீல் 2-வது இடத்தில் இருப்பார்.

கொரோனாவை கட்டுப்படுத்த மக்களை உயிருடன் புதைக்கும் சீனா; அதிர்ச்சி தகவல்

Image
கொரோனா வைரஸை உலகுக்கு பரிசாக வழங்கிய சீனா, கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நோயைக் கட்டுப்படுத்த சில விசித்திரமான முறைகளை சீனா பயன்படுத்துகின்றனர், இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சீனாவில் ஒரு ஆச்சரியமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அதன்படி சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியவர் ஒருவர் இறந்துவிட்டதாக அதிகாரிகள் அறிவித்து, பாலிதீனில் அடைத்து பிரேதப் பரிசோதனைக்காக பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். பிணவறைக்கு அழைத்துச் சென்ற ஊழியர்கள் அவரைப் பரிசோதித்தபோது முதியவரின் இதயத் துடிப்பு ஓடிக்கொண்டு இருந்தது. இதையடுத்து அவர் மீண்டும் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது சீன... விரிவாக படிக்க >>

சில நாட்களில் அக்னி நட்சத்திரம்.. 11 நகரங்களில் சதமடித்த வெயில்! எங்கு அதிகபட்ச வெப்பம் தெரியுமா

Image
வேலூரில் உச்சம் இன்றைய தினமும் மாநிலத்தில் வெப்பம் வெளுத்து வாங்கியது. பகல் நேரங்களில் பல பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவியது. தமிழ்நாடு முழுக்க இன்றைய தினம் மட்டும் சுமார் 11 நகரங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. அதிகபட்சமாக வேலூரில் வெப்பம் 107.6 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகி உள்ளது. இந்த கடுமையான வெப்பம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது, விரிவாக படிக்க >>

NEET | நீட் தேர்வுக்கான விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு - தேர்வை ஒத்திவைக்க மாணவர்கள் கோரிக்கை

Image
2022 நீட் தகுதி தேர்வுக்கான விண்ணப்ப காலக்கெடுவை தேசிய தேர்வு முகமை நீட்டித்துள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் வரும் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.  ஆன்லைன் மூலம் விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி 15-05-2022 இரவு 11.50 மணி வரை . முன்னதாக, வெளியிடப்பட்ட அறிவிப்பில் 2022 நீட்  தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை ஏப்ரல் 6ம்  தேதி முதல் மே 6ம் தேதி வரை நடைபெறும்  என்று அறிவிக்கப்பட்டது.மேலும், நாடு முழுவதும் ஜூலை 17 -ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.  இதற்கிடையே, நீட் தகுதித் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று பெற்றோர் மற்றும் மாணவர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்படுகிறது. ஆண்டிற்கு பல முறை நடத்தப்படும் ஜே.இ.இ  பிராதான தேர்வு அவ்வப்போது ஒத்திவைக்கப்பட்டு வருவதாக தெரிவித்த மாணவர்கள், " 2021 நீட்... விரிவாக படிக்க >>

புதிய உச்சம் - ஏப்ரல் மாத்தில் ரூ.1.67 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல்

Image
2022 ஏப்ரல் மாதத்திற்கான நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் குறித்த புள்ளி விவரத்தை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த மாதத்தின் மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1,67,540ஆக உச்சம் தொட்டுள்ளது. ஒரு மாதத்தில் வசூலிக்கப்பட்ட அதிகபட்ச ஜிஎஸ்டி தொகை இதுவே. இதற்கு முன்னர் கடந்த மார்ச் மாதம் ரூ.1,42,095 கோடி வசூலான நிலையில், அதை விட ஏப்ரல் மாதத்தில் ரூ.25,000 கோடி கூடுதலாக வசூலாகியுள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1,67,540 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. அதில், மத்திய ஜிஎஸ்டி வசூல் ரூ.33,159 கோடி, மாநில ஜிஎஸ்டி வசூல் ரூ.41,793 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வசூல் ரூ.81,939 கோடி, செஸ் வரி ரூ.10,649 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. இதன்மூலம், அமைச்சகத்தின் தொடர் முயற்சியால் வரி... விரிவாக படிக்க >>