Posts

நூல் விலை உயர்வு; பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!

Image
நூல் விலை உயர்வு; பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்! தமிழ்நாட்டில் பல இடங்களில் பின்னலாடை நிறுவனங்கள் இயங்கி வருகிறது. அதிலும், குறிப்பாக, திருப்பூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக விளங்கும் நூலின் விலை, கிலோவுக்கு 40 ரூபாய்க்கும் மேல் உயர்ந்துள்ளதாக பின்னலாடை நிறுவனங்கள் தொடர்ந்து குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், பருத்தி மற்றும் நூல் விலை உயர்வு காரணமாக தமிழ்நாட்டில் ஜவுளித் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், ஆலைகளில் உள்ள பருத்தி மற்றும் நூல்களின் இருப்பு தகவல்களை மத்திய அரசு வெளிப்படையாக வெளியிட வேண்டும் எனவும் அவர் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் உட்பட 25 மாவட்டங்கள் மற்றும் புதுவை,...

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் உட்பட 25 மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கிப் பணிகளில் தமிழ் கட்டாயம் இல்லை - 50% வெளிமாநிலத்தவர்கள் நியமனம்

Image
வங்கிப் பணியாளர் தேர்வு கழகம் நடத்தும் வங்கிகளுக்கான எழுத்தர் பணிகளில் தமிழ் மொழி கட்டாயம் இல்லை என்று அறிவித்தான் மூலம், தமிழக மாணவர்களுக்கு வாய்ப்புகள் பறி போகும் நிலை உருவாகியுள்ளதாக அனைத்திந்திய ஒபிசி வங்கிப்  பணியாளர்கள் நல வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அதன் செயலாளர் ஜி.கருணாநிதி தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிப் பணிகளில் கிளார்க் பணிகளுக்கு, அந்தந்த மாநில மொழிகளை படிக்க, எழுத, பேச வேண்டும் என்பது கட்டாயமாகவும் இருந்தது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில், அரசு வங்கிகளில் கிளார்க் பணிகளில் தமிழ்நாட்டவர்க்கே இதுவரை வாய்ப்புகள் இருந்தது. இந்நிலையில், வங்கி தேர்வு நடத்தும் வங்கிப் பணியாளர் தேர்வு கழகம்... விரிவாக படிக்க >>

டெல்லி முண்ட்கா தீ விபத்து: குறைந்தது 27 பேர் பலி - பிரதமர், டெல்லி முதல்வர் இரங்கல்

Image
2 மணி நேரங்களுக்கு முன்னர் விரிவாக படிக்க >>

விரைவு ரயில் சேவையில் மாற்றம்

Image
விரிவாக படிக்க >>

சென்னை குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் பற்றி எரிந்த கார்: உடனடியாக நிறுத்தப்பட்டதால் உயிர்சேதம் தவிர்ப்பு

Image
சென்னை: சென்னை குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் ஓடிக்கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை பல்லாவரத்தில் இருந்து 4 பேர் கொண்ட நபர்கள் திருமண நிகழ்ச்சியை முடித்து விட்டு, தாம்பரத்தை நோக்கி டாடா இண்டிகா காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலை வழியே வந்து கொண்டிருந்த பொழுது, காரின் பின்புறம் புகை கிளம்பியுள்ளது. இதனை கண்ட ஓட்டுநர் காரை சாலையின் இடதுபுற ஓரமாக நிறுத்தி உள்ளார். பின்னர், காரில் இருந்த 4 பேரும் உடனடியாக காரை விட்டு வெளியேறி உள்ளனர். காரின் பின்புறம் ஏற்பட்ட தீ, சிறிது நேரத்தில் மளமளவென பரவி கார் முழுவதும் பற்றி எரிந்தது. இதனையடுத்து தாம்பரம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை... விரிவாக படிக்க >>

சென்னை பாஷையில் உலகநாயகன் எழுதி, பாடி, ஆடி, கலக்கிய பாடல்களும் படங்களும் – ஒரு பார்வை

Image
சென்னை பாஷையில் உலகநாயகன் எழுதி, பாடி, ஆடி, கலக்கிய பாடல்களும் படங்களும் – ஒரு பார்வை உலகநாயகன் கமல் சென்னை பாஷை பேசி நடித்த படங்கள் எல்லாமே டாப்பு தான். பாடல்களும் செமயாக இருக்கும். அந்த வகையில் எல்லாம் இன்பமயம் முதல் தற்போதைய விக்ரம் வரை உள்ள படங்களின் வரிசைப்பட்டியலைப் பார்க்கலாம். எல்லாம் இன்பமயம் 1981ல் ஜி.என்.ரங்கராஜன் இயக்கிய படம் எல்லாம் இன்பமயம். இளையராஜாவின் இன்னிசையில் கமல், மாதவியின் நடிப்பில் வெளியான படம் எல்லாம் இன்பமயம். இந்தப்படத்தில் கமல் சென்னை பாஷையில் பட்டையைக் கிளப்பியிருப்பார். மாமன் வீடு மச்சு வீடு என்ற பாடல் செம ஹிட் ஆனது. அபூர்வ சகோதரர்கள் 1989ல் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளியான அபூர்வ சகோதரர்கள் படத்தில் சென்னைத் தமிழில் மனோரமாவும், உலக நாயகன் கமல்ஹாசனும் இணைந்து ராஜா கைய வச்சா பாடலைப் பாடி அசத்தியிருப்பார்கள். இளையராஜாவின் இசையில் கவிஞர் வாலியின் வைர வரிகளில் இந்த பாடல் அசத்தலாக இருந்தது. அதே போல அண்ணாத்தே பாடலின் ஆரம்ப வரிகள் சென்னை பாஷையில் தான் அமைந்தன. காதலா காதலா kasu mela song kamal, prabu deva 1998ல் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளியான க...